search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹபீஸ் சயீது"

    மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீன அதிபர் கூறியதாக வெளியான தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
    பீஜிங்:

    மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருகிறார். அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட இவர் அரசியல் கட்சி ஒன்று தொடங்கியுள்ளார்.

    இவரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது, பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக கூறி அமெரிக்கா அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை நிறுத்தி வைத்தது. இதனால், ஹபீஸ் சயீது பாகிஸ்தானுக்கு தலைவலியாக இருந்து வருகிறார்.

    கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஹபீஸ் சயீதை மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், மேற்கண்ட செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற செய்தி என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
    ×